மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – மம்தா பானர்ஜி!

Filed under: இந்தியா |

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 2021 ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இன்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியது: இந்தியாவில் சீனா நாட்டின் செயலிகளை தடை செய்வது மட்டுமல்லாமல் இந்தியராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனாவுக்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டும்.

மேலும், மேற்கு வங்காள மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நம் நாட்டில் 130 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கவேண்டும் என்றார்.

இதற்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் நம் நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.