ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். ஆனால் அதன் பின் “36 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார்.
ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுற்றதையடுத்து இப்போது திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளது.