மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

Filed under: சென்னை |

அரசு டாக்டர்கள் சங்கம் வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர் உயிரிழந்தார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது 304ஏ என்ற பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் உடனடியாக சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 304ஏ என்ற பிரிவு மாற்றப்பட வேண்டும் என்றும் மீறி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.