ஏன் இனிய தமிழ் மக்களே; பார்க்கத்தான போறீங்க காளியோட ஆட்டத்த, எடுடா வண்டிய போடுடா விசில் – கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் ட்வீட்!

Filed under: சென்னை |

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர். இவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவருடைய சுழல்பந்து பேட்ஸ்மேன்களை சில சமயம் கதிகலங்க வைக்கும். இவர் சிறப்பாக பந்து வீசுவார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து ஐபிஎல் அணிகள் பயிற்சியை துவங்க ஐக்கிய அரபு அமீரகதுக்கு சென்றுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி வீரர்கள் சென்றனர்.

தற்போது, இம்ரான் தாஹிர் வீரர்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்து தமிழில் ட்விட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டரில் பதிவிட்டது; என் இனிய தமிழ் மக்களே உங்கள் நலம் நலம் அறிய ஆவல். பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம். உங்கள் நல்லாசியுடன். பார்க்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்தை எடுடா வண்டிய போடுடா விசில்.

https://twitter.com/ImranTahirSA/status/1297020568990961665

இவ்வாறு பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் பதிவிட்டுள்ளார்