மருத்துவ இடங்களை நிரப்ப கலந்தாய்வு தேதி!

Filed under: தமிழகம் |

இன்று தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் எனவும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7 முதல் 15ம் தேதி வரை நடடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்க்கும்படி தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவித்துள்ளார்.