மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவிய ஜோதிடர் ஷெல்வி!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை : தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, ஜோதிடர் ஷெல்வி, 2 டன் அரிசியை நேற்று நன்கொடையாக வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்வரின் நிவாரண நிதிக்கு, பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும், தங்களால் இயன்ற அளவுக்கு, உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களுக்காக, புகழ்பெற்ற யதார்த்த ஜோதிடர் ஷெல்வி, 2 டன் அரிசியை நேற்று நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலைப் பாராட்டி, மருத்துவமனை நிர்வாகம், பாராட்டு கடிதத்தை வழங்கியுள்ளது.