மாணவிக்குப் பிறந்த குழந்தை!

Filed under: இந்தியா |

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிம்தேகா பகுதியில் வசிக்கும் ஜெய்ராம் நாயக்(20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்ததோடு பலாத்காரமும் செய்துள்ளார்.

இந்நிலையில் கர்ப்பமடைந்த சிறுமியை அப்பகுதி மக்கள் சேர்ந்து ஜெய்ராமுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். இது தெரிந்து ஜெய்ராம் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக உள்ளதாக புகார் கூறியுள்ளனர். சிறுமி பள்ளி செல்ல முடியவில்லை. எனவே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. 14 வயது சிறுமி தாயாகியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.