மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது குண்டாஸ்!

Filed under: சென்னை |

கல்லூரி மாணவர் சதீஷ் சென்னை பெரம்பூரில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த கல்லூரி மாணவர் சதீஷ் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முதல் முறையாக சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் சதீஷ் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ்க்கு ஜாமீன் கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.