மின்னல் தாக்கி 33 பேர் பலி

Filed under: உலகம் |

பீகாரில் மின்னல் தாக்கியதில் 33 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் டுவிட்டரில் மக்கள் இறந்ததற்கு வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாநில நிர்வாகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.