பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

Filed under: இந்தியா |

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதனைப்பற்றி மாநில பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறுகையில்: பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவலில்; மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாட்னாவில் 5 பேர், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் நான்கு பேர், சமஸ்திபூரில் மூன்று பேர், கடிகர் மாவட்டத்தில் மூன்று மற்றும் ஷிவ்ஹர் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே பீகார் மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கடும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.