மிஷ்கின் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

இயக்குனர் மிஷ்கின் இப்போது “பிசாசு 2” படத்தை இயக்கி வருகிறார்.

மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசையமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் “டெவில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் பூர்ணா, விதார்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். எழுத்தாளர் தேவிபாரதியின் கதையொன்றை தழுவி திரைக்கதை அமைத்துள்ளார் ஆதித்யா. படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக மிஷ்கின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.