மீண்டும் ஒரு மாணவி தற்கொலை!

Filed under: தமிழகம் |

தொடர்ந்து பள்ளி மாணவிகள் தற்கொலை நிகழ்வுகள் நடந்து கொண்டே உள்ளது. தற்போது பிளஸ் 2 பள்ளி மாணவி பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மல்லிகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மாம்பலப்பட்டு என்ற பகுதியில் பள்ளியில் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, காலையில் வகுப்பில் மயங்கி விழுந்தார். உடனே பள்ளி ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சி மருத்து குடித்துள்ளதாகவும் அவரை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அருகேயுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மாணவிக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருடன் காதல் இருந்ததாகவும், இது மாணவியின் வீட்டிற்கு தெரியவே அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.