முக கவசம் அணியாத தொழிலாளர் ஆணையர் நந்தகோபால்!

Filed under: சென்னை |

சென்னை,மே 15

தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர் உட்பட அனைவரும் கொரோனா தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் முககவசம் அணிந்து அரசு பணிகள் செய்து வரும் இத்தருவாயில், எந்த சட்டத்தையும் மதிக்காமல் தான்தோன்றிதனமாக தன் இஷ்டத்திற்கு இந்நாள் வரை தொழிலாளர் துறையை சிரழித்து கொண்டியிருக்கும் ஆணையர் நந்தகோபால், பொதுமக்கள் பலரும் வந்து செல்ல கூடிய தனது அலுவலகத்தில் எந்தவித விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தொழிலாளர் ஆணையரே, இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாமல் அலுவலகத்தில் இருக்கும் நிலையை பார்க்கும் போது, ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாரிய நலத்திட்ட உதவிகளை எப்படி நிறைவேற்றுவார் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

அரசு பணியில் முககவசம் அணியாமல் பணியாற்றும் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ?