சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தொற்று பரவுதல் குறைவு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Filed under: சென்னை |

சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தை ஆய்வு நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய பிரகாஷ் கூறியது: சென்னையில் மொத்தம் 54 கொரோனா வைரஸ் சிறப்பு மையத்தில் 17,500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் 4,350 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளதாகவும் மற்றும் மீதி படுக்கைகள் காலியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா பாதிப்பு எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.