முதலமைச்சரைப் பற்றி அவதூறு வீடியோ பரப்பிய அதிமுக நிர்வாகி கைது!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சரை பற்றி அவதூறான வீடியோ பரப்பிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். சிலர் அவதூறு வீடியோக்கள் பதிவிட்டதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவிட்டதற்காக நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் முதலமைச்சர் சமூக வலைதளப்பக்கத்தில் அவதூறு வீடியோ பரப்பியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் பேரில் போலீசாரால் அவரைப் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுகவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பு நின்று முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.