முதலமைச்சரை அவதூறாக பேசிய போலீஸ் கைது!

Filed under: அரசியல்,இந்தியா |

போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை என்.டி.ஆர் மாவட்டத்தில் கவுராவரம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தென்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் அவதுறாக பேசியுள்ளார். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த நபர் அதுகுறித்து சிலாகல்லு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் கான்ஸ்டபிளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பொது அமைதியை குலைக்கும் விதமாக பேசியதற்காக கான்ஸ்டபிளுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயவாடா நகர போலீஸ் ஆணையர் உத்தரவின்பேரில் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.