முதலமைச்சர் பதவிக்காக சண்டைவரும்; முன்னாள் அமைச்சர்!

Filed under: அரசியல்,இந்தியா |

கடந்த 10ம் தேதி 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்று வருகிறது.

இன்றைய வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, காங்கிரஸ் 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரமாகியும் இன்னும் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறத. முதலமைச்சர் பதவிக்கான சண்டை காங்கிரஸ் கட்சியில் அடுத்தாண்டுகளுக்கு தொடரும் என்று பாஜக முன்னாள் அமைச்சர் அரசு ஞானேந்திரா பேட்டியில், “காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி. அக்கட்சியில் முதலமைச்சர் பதவிக்கான போட்டி அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடரும். அக்கட்சியில் உள்ள அனைத்து சாதிப்பிரிவினரும் முதலமைச்சர் பதவி வேண்டுமென்று கேட்டு வருகின்றனர். இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் சண்டை நடைபெறும் என்பதால் அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை; டில்லிக்குச் சென்றாலும் அவர்களின் சந்தை தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.