முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசிய இடைத்தரகர்!

Filed under: அரசியல் |

கர்நாடக பாஜக எம்எல்ஏ ரூபாய் 2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அரசியலில் இடைத்தரகர்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது டெல்லியில் இருந்து ஒரு இடைத்தரகர் வந்ததாகவும் அவர் தன்னிடம் 2500 கோடி ரூபாய் தயாராக வைத்திருங்கள் உங்களை முதலமைச்சர் காட்டுகிறேன் என்று தெரிவித்ததாகவும் கூறினார். அதற்கு 2500 கோடி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தான் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது