முதலமைச்சர் பதவியே முக்கியம்!

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகியதாக அசோக் கெலாட் முதலமைச்சர் பதவி மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவியை விட முதல்வர் பதவியே மேல் என முடிவு செய்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திக்விஜய் சிங் மற்றும் சசிதரூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முப்பதாம் தேதி வரை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருப்பதால் மேலும் ஒரு சிலர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.