முதலமைச்சர் பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார் !பிரதமர் மோடியை சந்திக்கிறார்

Filed under: அரசியல் |

இரண்டு நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

 பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால்,கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.