முதலமைச்சர் மகள் வீட்டில் சிபிஐ சோதனை?

Filed under: அரசியல் |

தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் சிபிஐ சோதனை நடந்துள்ளது.

கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. மேலும் டில்லி துணை முதலமைச்சர் வீட்டில் நடந்த சோதனையையடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் மகள் கவிதா வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். இதில் தெலுங்கானா மாநில தலைவர் சஞ்சய் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.