நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல்!

Filed under: சென்னை |

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல். பின்னர் சோதனையின் முடிவில் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் 108க்கு போன் செய்து இருக்கிறார். பின்னர் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தினர். பின்னர் சோதனை முடிவில் வெடிகுண்டு இல்லை இது ஒரு புரளி செய்தி என கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் அந்த மர்ம நபர் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டியுள்ளார்.