முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்றபோது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவாதாக அறிவித்திருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இத்திட்டம் எப்போது அமலுக்கு வருமென்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்கட்சிகளும் இதுகுறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. சமீபத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023&-24ம் ஆண்டிற்காக பட்ஜெட்டின் போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுபற்றி இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அவ்வகையில் தற்போது மாதம் ரூ.1000 பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. அதன்படி குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 திட்டத்தில் சேர தகுந்த பயனாளிகளை வருவாய்த்துறையும், மகளிர் மேம்பாட்டுக்குழுவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இப்பயனாளர் பட்டியல் தயாராகும் பட்சத்தில் இதுவிரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.