முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் சமீபத்தில் மறைவடைந்த நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினார்கள். சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு ஓபிஎஸ் இடம் ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நடந்ததாகவும் இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் ஆறுதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.