முதலமைச்சர் வழங்கும் விருது!

Filed under: தமிழகம் |

காவல்துறை அதிகாரிகள் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை சிறப்பாக செய்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை கார் வெடி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட உளவுப்பிரிவு, சைபர் கிரைம், கிரைம் பிராஞ்ச் காவல்துறையினருக்கு 15 பேருக்கு முதலமைச்சரின் விருது வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை கால் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் இந்த சம்பவம் காவல்துறை குறித்து பாஜக கடும் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காவல்துறைக்கு முதலமைச்சர் விருது வழங்க போவது குறிப்பிடத்தக்கது.