முதல் விதை நான் போட்டது; கமலஹாசன் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இல்லத்தரசிகளுக்கு பணம் கொடுப்போம் என்று அறிவிப்பை முதன் முதலில் வெளியிட்டது குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இத்திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.