முன்னாள் முதலமைச்சரின் அதிரடி பேட்டி

Filed under: தமிழகம் |

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்யும்” தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் 7 பேர் விடுதலையை எதிர்த்து வரும் நிலையில் முன்னாள் புதுவை முதலமைச்சரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.