மும்பைக்கு குண்டு மிரட்டல்!

Filed under: இந்தியா |

தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா உட்கட்சி எதிர்ப்பு அணி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில தலைநகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது. இந்த இமெயில் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.