மும்பையில் குடியேறிய சமந்தா!

Filed under: சினிமா |

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா மும்பையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்.

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக Citadel என்ற என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஹாலிவுட் புகழ் ரஸோ ப்ரதர்ஸ் தயாரித்து வரும் அந்த சீரியல் அமேசான் பிரைம் தளத்திற்காக உருவாகி வருகிறது. மும்பையில் படமாட்டப்பட்டு வருவதாலும், இன்னும் பல இந்தி திரைப்படங்ககளில் நடிக்க எண்ணியும் பாலிவுட்டில் செட்டிலாக முடிவெடுத்துவிட்டாராம் சமந்தா. இதனால் அங்கு 15 கோடி ரூபாயில் 3BHK வீட்டை வாங்கிவிட்டாராம்.