மு.க.ஸ்டாலின் கூறியது அவரது சொந்த கருத்து: வைகோ

Filed under: அரசியல்,தமிழகம் |

Stalinஎதிர்க்கட்சிகள் ஒரணியில் திரள வாய்ப்பு இருப்பதாக மு.க.ஸ்டா லின் கூறியது அவரது சொந்த கருத்து என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தமிழக பிரச்சினைகளுக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வரும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கட்சித் தலைமையகமான தாயகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு வைகோ அளித்த பதில்:

உங்களை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறினாரே?

நாங்கள் சந்தித்தபோது அரசியல் பற்றியோ, தேர்தல் பற்றியோ பேசவில்லை. மு.க.ஸ்டாலின் கூறியது அவரது கருத்து. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடி யும்.