மூதாட்டி மீது வழக்குப்பதிவு!

Filed under: அரசியல்,தமிழகம் |

சமீபத்தில் நடத்துனரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செயலுக்காக சமூக தளங்களில் நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று பேசியது பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது ஓசியில் போகமாட்டேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். தற்போது பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் “ஓசி என்று அமைச்சர் சொன்னால் அது விளையாட்டு, ஓசியில் போகமாட்டேன் என்று சொன்னால் மட்டும் வழக்கா?” என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.