மூன்றாவது பாகம் எதிர்பார்க்கலாம்!

Filed under: சினிமா |

தமிழ் வருடப்பிறப்புக்கு வெளியான “கேஜிஎப் 2” திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் கடைசியில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் தொடர்கிறது. கே.ஜி.எஃப்-பை பிடிக்க யாஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யாஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் எதிரிகளை எதிர்த்து யாஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் கதை.
இந்நிலையில் கேஜிஎஃப் 3ம் பாகத்தை எதிர்ப்பார்க்கலாம் என படத்தின் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், கேஜிஎஃப் 3 உண்டா என இயக்குனர் பிரசாந்த் நீல் கேட்கப்பட்டார். மூன்றாம் பகுதிக்கு திட்டமிட்டிருப்பதை இயக்குநர் மறுக்கவோ ஒப்புக்கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.