மூன்றாவது திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி செய்து கொண்ட வனிதா விஜயகுமார்!

Filed under: சென்னை |

1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட வனிதா அவர்களுடன் எற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் விவாகரத்து பெற்று கொண்டார்.

இவருடைய தந்தையான விஜயகுமாருடன் சண்டை ஏற்பட்டதால் இரண்டு மகளுடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனரை நேற்று கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் சென்னை போரூரில் உள்ள வனிதா வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது என கூறப்படுகிறது.