மெகா தடுப்பூசி மையம்!

Filed under: தமிழகம் |

ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாட்டில் நாளை மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2700க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபத்தில் முடிவு செய்த நிலையில் நாளை தடுப்பூசியும் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி மையத்தை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.