சென்னை மெட்ரோ நிறுவனம் இன்று முதல் மெட்ரோ ரயில் கூடுதல் நேரங்களில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணத்தில் நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படுவது போல் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பீக் நேரத்தில் மட்டும் ஐந்து நிமிடம் இடைவேளை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இன்று முதல் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வெளியூர் செல்லும் பொதுமக்கள் கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த கூடுதல் மெட்ரோ ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.