சென்னை மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்ற செல்ஃபி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
சென்னையில் மிக முக்கியமான இடம் என்றால் மெரினா பீச். சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. கொண்டது.
சென்னைவாசியாக இருந்தாலும், வெளியூரில் இருந்து வருபவர்களாக இருந்தாலும் மெரினா பீச் அவர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கும்.
அந்த கடற்கரையை அரசு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மாற்றி வருகிறது. திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மெரினாவை அடுத்தடுத்து சீர்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ என்ற செல்ஃபி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. நம்ம சென்னை என்ற டிஜிட்டல் போர்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் முன் நின்று செல்ஃபி எடுத்து சென்னை மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த செல்ஃபி மையம் ரூ.24 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது.