மெஸ்சிகோ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு!

Filed under: இந்தியா,உலகம் |

இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்து மெக்சிகோவில் நடந்துள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலையில், மேற்கு மெக்சிகோவில் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க நாட்டின் எல்லையிலுள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இதில், இந்தியர்கள், டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்பேருந்தில் பயணம் செய்தவர்களின் எத்தனை பேர் இந்திய வம்சாவளியினர் என தகவல் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.