மேயருடன் கவுன்சிலர் வாக்குவாதம்

Filed under: அரசியல்,சென்னை |

மேயர் பிரியா ராஜனிடம் திமுக கவுன்சிலர் நேற்று நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2 மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இக்கூட்டத்தில் 200 கவுன்சிலர்களில் 17 பேருக்கு மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. பலருக்கும் கேள்வி கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். கொரோனா தொற்று காரணமாக விரைவாக கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக பூஜ்ஜிய நேரம் ரத்து செய்யப்பட்டது. பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால் திமுக கவுன்சிலர்கள் உட்பட பலரும் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை மேயர் பிரியா, “கடந்த மாமன்ற கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் தவிர்த்து, பேசாத உறுப்பினர்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது இல்லை. கொரோனா பரவல் அதிகரித்ததாலேயே நேரமில்லா நேரம் தவிர்க்கப்பட்டது. வருங்காலங்களில் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில், நேரமில்லா நேரம் மீண்டும் சேர்க்கப்படும்” என கூறினார்.