“மை டியர் பூதம்”

Filed under: சினிமா |

“மைடியர் பூதம்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது.

ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “மைடியர் பூதம்.” இப்படத்தின் ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எனக்கு மட்டும் ஏன் ஏன்” என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ளது. டி இமான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவான இப்பாடலை நாகேஷ் என்பவர் பாடியுள்ளார். முதல்முறை பாடலை கேட்கும்போதே இனிமையாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.