மோடிக்கு கருப்புக்கொடியா?

காங்கிரஸ் கட்சி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னை – கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தமிழக வரும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பதவியை இழக்க செய்து அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் என செல்வபெருந்தகை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.