பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகிய மூவரையும் சந்திக்க இருப்பதாகவும் தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும்போது ஏற்படக்கூடிய கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் இக்கருத்துக்கு மற்ற பாஜக தலைவர்கள் உடன்படவில்லை. கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமையை சந்திக்க அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகவும் வரும் 26ம் தேதி அவர் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்னும் சில நிமிடங்களில் கமலாலயத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.