யாத்திரைக்கு முன்புதிவு!

Filed under: உலகம் |

அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதற்கு 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று புனித யாத்திரை தொடங்கி உள்ளது.

ஆண்டுதோறும் காஷ்மீரிலுள்ள அமர்நாத் குகைக்கோவிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க தரிசனம் செய்தவற்கு பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா நேற்று தொடங்கி வைத்தார். பகல்காம் மற்றும் பதால் அடிவார முகாம்களை பயணிகளின் வாகனங்கள் சென்றடைந்ததும் அங்கிருந்து கால்நடையாக புனித யாத்திரையை பக்தர்கள் தொடங்குவார்கள். வருகிற ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று முடிவடைய உள்ள யாத்திரைக்கு செல்ல 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பதிவு செய்துள்ளனர்.