ரஜினி 169!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் வேலையில் முனைப்புடன் இருக்கிறார் நெல்சன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி 169 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் “பீஸ்ட்” திரைப்படம் ரிலீசுக்கு பிறகு கதை கலந்துரையாடலின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவில்லை என கூறப்படுகிறது.

ரஜினி 169 படத்தில் அவரது இளமைக் கதாப்பாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு ரஜினிக்ககாகவே அவர் தீவிரமாக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார். தற்பொது ஒரு பாதி மட்டும் எழுதிமுடித்துள்ளதாகவும், மீதியை எழுதி முடித்த பிறகுதான் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கும் எனவும் கூறியுள்ளார்.