ரத்தம் தேவைக்கு அழைக்கவும்!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

உலக நாயகன் கமலஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இருக்கும் பட்சத்தில் ரத்தம் தேவைப்படுவோர் அணுக வேண்டிய எண்ணை அறிவித்துள்ளார்.

இதுபற்றிய ஓர் அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைந்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ‘Kamal’s Blood Commune’ உருவாக்கியுள்ளோம். தமிழில் “கமல் குதிக்கொடை குழு”. இதன் மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். 9150208889 என்ற எண்ணுக்கு அழைத்தால் அப்பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு துரிதமாக உதவ முடியும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும் இந்த எண்ணை அழைத்து தங்களை பதிவு செய்துகொள்ளலாம்” என அறிவித்துள்ளார்.