நடிகர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Filed under: சென்னை |

இன்று மதியம் காவல் காட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒரு மர்மநபர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளது என பேசிவிட்டு இணைப்பு துண்டித்து இருக்கிறேன்.

இதன் பின்னர் நீலாங்கரை காவலர்களுக்கு தகவல் தெரிவித்து. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். பிறகு தான் இது ஒரு புரளி மிரட்டல் என்பது தெரியவந்தது.

அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை ஆய்வு நடத்தியதில் அது விழுப்புரம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் காவலர்களுக்கு தகவல் கொடுத்து தற்போது அந்த நபரை தேடி வருகிறார்கள்.