“ரத்தம்“ படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

இயக்குனர் சி எஸ் அமுதன் “தமிழ்படம் 1” மற்றும் 2 படங்களை இயக்கி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி “ரத்தம்“ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

முந்தைய படங்களைப் போலில்லாமல், சீரியஸான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் சி. எஸ் அமுதன். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.