ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.1 கோடி இழந்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பலர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையத்தில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் விஜய்(33) பிகாம் படித்துள்ளார். தன் தந்தையுடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த விஜய், இதில், ரூ.1 கோடியை இழந்துள்ளார். பணத்தை இழந்த வேதனையிலிருந்த அவர் தற்கொலைக்கு முயன்று நேற்று முன் தினம் ஒரு வீடியோவில் தன் நண்பர்களுக்கு தன் மரணம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதன்பின், அவரது நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.