ரயில் மோதி கல்லூரி மாணவி பலி!

Filed under: சென்னை |

தாம்பரம் ரயில் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ரயிலில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக ரயில்கள் மோதி மனித உயிர் பலியாகி வருவது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பின்றி கடக்கக்கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பயணிகள் கவனக்குறைவாக ரயில் தண்டவாரத்தை கடந்து செல்வதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் என்ற பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கல்லூரி மாணவி நிகிதா என்பவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எம்சிசி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் நிதிதாவின் மறைவு அக்கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக கல்லூரி மாணவி நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது இரு பக்கமும் ரயில்கள் வருகிறதா என்பதை பார்த்து கவனத்துடன் கடக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.