ராகுல் காந்தி நிர்மலா சீதாராமனை பற்றி கருத்து!

Filed under: அரசியல் |

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலுமில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவருடைய விமர்சனம் கடும் தாக்குதலாக உள்ளது. இந்நிலையில் இன்று அவருடைய விமர்சனம் மத்திய நிதியமைச்சர் மீது திரும்பியுள்ளது. இதுபற்றி அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலுமில்லை. அவர் ஜீரோ அண்டர்ஸ்டாண்டிங் நிலையில் உள்ளார். அவர் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்பட்டு வருகிறார். ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இக்குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் என்னிடம் ஒட்டுமொத்த சிஸ்டத்தை கொடுத்தால் தேர்தலில் பாஜகவினர் எப்படி வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதை நிரூபித்து காட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.