கரூர் எஸ்பி விளக்கம்..!

Filed under: அரசியல்,தமிழகம் |

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறித்து கரூர் எஸ்பி விளக்கமளித்துள்ளார்.

இன்று காலை முதல் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வருமானவரித்துறையினர் சென்றபோது திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி, “கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரத்தில் ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம், ஆனால் எந்தவித தகவலும் எங்களுக்கு வரவில்லை. இருப்பினும் ஐடி ரெய்டு குறித்து தகவல் அறிந்து 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்” என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.